Friday, September 9, 2011

திருந்தாத ஜென்மம்

திருந்தாத ஜென்ம பட்டியலில் முதல் இடம் எனக்குத்தான். நினைவு தெரிந்து படித்த முதல் புத்தகங்கள் – அம்புலிமாமா, பாலமித்ரா,ராணி காமிக்ஸ் என பல சிறுவர் மலர்கள். புத்தகத்தை எடுத்துக் கொண்டு செட்டில் ஆனால் முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை படிக்காமல் விடுவதில்லை. அம்புலிமாமாவில் வந்த விக்கிரமாதித்யன் வேதாளம் கதைகள், தொடர்கதைகள்,ராணி காமிக்ஸில் வந்த மாயாவியின் சாகஸம் எல்லாம் இன்னும் நினைவில் நிற்கின்றன. பரமார்த்தகுரு கதைகள், தெனாலிராமன், பீர்பால், விக்கிரமாதித்யன் பதுமைகள், இப்படியாக பல புத்தகங்கள் படித்து இருப்பேன். படிப்பது பிடிக்கும் என்பதால், படித்ததெல்லாமே பிடித்தது. சாமான் கட்டி வரும் பொட்டல கவர் வரைக்கும் படிக்கும் பைத்தியம் முத்தியது.கொஞ்சம் பெரிய பெண் ஆனதும் ராணி, குமுதம், ஆனந்த விகடன், அப்படியே கொஞ்சம் தேவிபாலா, கண்மணி, ராணிமுத்துயில வரும் நாவல்கள் என கையில் கிடைக்கும் புத்தங்கள். அப்புறம் அப்பா கல்கியில் தொடராக வந்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், எல்லாவற்றையும் பைண்ட் செய்து வைத்திருக்க அதையும் விட மனது இல்லை,, அப்படியே ராஜேஸ்குமார், சுஜாதா, பட்டுக்கோட்டை பிராபகர், சுபா, பாலகுமாரன், என்று புத்தி போனது,

ஒரு நாள் எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டிற்கு புதிதாக வாடகைக்கு வந்தாங்க தஞ்சாவூரில் இருந்து... அவங்க என்னை விட புத்தக பைத்தியம்... அவங்க விட்டில இருந்தது ரமணி சந்திரன் நாவல் – “மயங்குகிறாள் ஒரு மாது” என்ற ஒரு புத்தகம்,,, நமக்கு தான் புத்தகத்தைக் கண்டலே அப்படியே புல் அரிச்சு போய்டுமே.. படிச்சுட்டு தரேன்கனு வாங்கி, ஒரு பாய் தலையனை சகிதமாக படுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். கதையை எழுதினால் அடிக்க வருவீர்கள் தான் இருந்தாலும் சிறு சுருக்கமாக –
கதாநாயகி கதாநாயகனை சீண்டும் விதமாக நடந்து கொள்வாள், அதனால் கோபமடைந்த கதாநாயகன் அவளை கடத்தி சென்று விடுவான், வீட்டினர் அனைவரும்
அவள் யாருடனோ ஓடிவிட்டதாக நினைத்து கொள்வர், கொஞ்ச நாள் கழித்து அவள் கர்ப்பவதியாக திரும்பி வரும்போது யாரும் ஏற்றுக்கொள்ளாததால் தற்கொலைக்கு முயன்று தோற்று, திரும்ப குழந்தையை ஒப்படைக்க வந்து திரும்பவும் சிறைபடும் போது, கதாநாயகனுக்கு அவள் மீது அன்பு ஏற்ப்பட்டு, பின்னர் அவளுக்கும் ஏற்ப்பட்டு, அவள் வீட்டு மனிதர்கள் வந்து ஒப்புக்கொண்டு திருமணம் நடப்பதாக முடியும்.


இதை நான் எப்படி படித்தேன் என்று நன்றாக நினைவு இருக்கின்றது. கண்களில் நீர் வழிய வழிய தலையனை முழுவதையும் ஈரமாக்கி, கண்களை கண்ணீர் மறைக்க எனக்கே நடந்தது போல நினைத்து அவ்வளவு சோகமாக படித்தேன்.


அடுத்து அடுத்து பால்நிலா, நாள் நல்ல நாள், வைரமலர், எனக்காவே நீ, விடியலை தேடும் பூபாளம், என் கண்ணில் பாவையடி, காதலெனும் சோலையிலே என பல புத்தகங்கள். நடுவில் எனக்கு படித்ததையே திரும்ப படிக்கும் படிக்கும் பழக்கம் வேறு… படித்த புத்தகத்தையே திரும்ப படிக்க ஆரம்பித்து விடுவேன். என்ன ஜென்மமோ என்று தானே தோனுது இப்போ உங்களுக்கு. சில புத்தகங்கள் அவர்களுடைய புத்தகத்துடைய அப்பட்டமான காப்பியாக இருக்கும், கேவலமான கதையாக இருக்கும், அப்படிபட்ட புத்தத்ததை படித்தவுடன் இத்தோடு இவங்க புக் படிக்கவே கூடாது என்று தோனும். . ஆனால் அத்தனையும் அடுத்து அவர்களின் புத்தகத்தை பார்க்கும் வரை தான்..


சரி புத்தகம் தானே அதை படிப்பதில் என்ன தப்பு என்று நினைப்பவருக்கு – எப்படி படிப்பேன் என்றால், அதை படித்து முடிக்கும் வரை சோறு தண்ணி தேவை இல்லை. இரவு பகல் பார்ப்பதில்லை. விடியற்காலை நான்கு மணி வரை நிறுத்தாமல் படித்து இருக்கிறேன். வீட்டில் ஒரு வேலை செய்து நினைவில்லை. ஆனால் நான் படித்த எந்த புத்தகத்தின் கதாநாயகியும், என்னைப் போல புத்தகம் படித்து பொழுது போக்கிய சோம்பேறிகள் இல்லை என்ற உண்மை ஏனோ உறைக்கவே இல்லை. நிஜமாக அந்த கதையில் வரும் வில்லிகளை போலவே இருந்தேன், ஆனால் கற்பனை என்னவோ மிகவும் உத்தமமான பெண் என நினைப்பு…

இதிலும் சில கனவுகள் வேறு... நமக்கும் இந்த கதாநாயகிகள் போல ஒரு சுவாரிஸ்யமான வாழ்க்கை அமையும்… ஒரு நல்ல ஸ்மார்ட்டான முக்கியமாக பணக்காரன் எம்.டி யாக வேலை செய்யும் கம்பனிக்கு அவரது செக்கரட்டிரியாக போவோம்… அல்லது யாராவது ஒருவனுடன் சண்டை என ஆரம்பித்து பின்னர் காதலாக மாறும் அல்லது எவனாவது ஒருவனை பார்த்தவுடனே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்து நமக்காக பிறந்தவன் இவனே என்று வெள்ளை உடை தேவதைகள் சொல்ல அவனை கரம் பிடிப்போம், இல்லை கல்யாணம் பண்ணிக் கொள்ளும் போது பிடிக்காமல் செய்து கொண்டு பின்னர் அவனே சிறந்த ஆண்மகன் என்று தெளிந்து அவனுக்காகவே வாழுவோம் அப்படியும் இல்லையா எவனாவது ஒருவன் நம்மைப்பார்த்து நம்மை த்தான் திருமணம் செய்து கொள்ளுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று கல்யாணம் செய்து கொண்டு நம் மேல் உயிராக வாழ்வான் என்று.. கற்பனைகள் சுகமே... ஆனால் வளர வளர ஒரு தெளிவு வந்து விட்டு இருந்தது – நம் வாழ்க்கையில் அது மாதிரி எதுவும் நடக்க போவதில்லை என்று...


பின்பு நெட் அறிவு வந்தவுடன் இதிலும் ரமணிசந்திரன் பற்றிய தேடல்தான்... தேடி ஆன்லைனில் கண்டுபிடித்தேன் ஒரு சைட். அங்கு எல்லா ரமணிசந்திரனையும் ஒரு மகா புண்ணியவதி ஸ்கேன் செய்து, அப்லோட் செய்து வைத்து இருந்தார், நான் மட்டும் கெட்டால் போதுமா? , யான் பெற்ற இன்பம் பெருக என்ற எண்ணத்தில் இங்கே போஸ்ட்..


அவரது புத்தங்களை கடுமையாக பேசபவர்களும் இருக்கிறார்கள், அவர் கதைகளை நல்லது, அல்லது அறிவுக் கண்களை திறப்பது என்று எல்லாம் என்னாலேயே சொல்ல முடியாது. அது வெறும் ஒரு பொழுது போக்கு மட்டுமே, இந்த கதைகளில் மாமியார் மருமகள் சண்டைகள் வருவதில்லை, வருமானத்தினை எண்ணி எண்ணி செலவு பண்ணும் வறுமை வருவதில்லை, நம்மை சுற்றிலும் நெருக்கும் சமுதாய பிரச்சனைகள் வருவதில்லை, வருவதெல்லாம் ஒரு அழகான கதாநாயகி, ஒரு பணக்கார கதாநாயகன், அவர்களின் கருத்து வேற்றுமைகள்/ஒற்றுமைகள், அவர்களை சுற்றி நிகழும் சில பல நிகழ்ச்சிகள்,குழந்தை பெற்ற பின் கல்யாணம் அல்லது கல்யாணம் செய்த பின் குழந்தை (இது எல்லாம் அரசியல்ல சகஜம்மப்பா), அன்பு, காதல், அப்புறம் ஒரு இன்ப வாழ்வு. எத்தனையோ பெண்களுக்கு இவைகளில் பல மறுக்கப் பட்டு இருக்கலாம், அவர்களின் உணர்ச்சிகளின் வடிகாலாக இந்த புத்தகங்களை படிப்பவர்களாக இருக்கலாம்.


மேலும் ரமணி சந்திரன் படித்ததால் வாழ்க்கை வீணாக போனது என்று புலம்புவர் யாரையும் நான் பார்த்தது இல்லை. படிப்பவர்களுக்கும் நன்றாக தெரியும், இது ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று, அப்படியும் கேளாமல் வீணாக்கி கொள்ளுபவர்க்கு, இது வெறும் கருவியாக மட்டுமே இருக்க கூடுமே தவிர முதல் காரணமாக இருக்க முடியாது என நான் நினைக்கிறேன்.


திருந்தாத ஜென்மம் என்றுதானே திட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள், அதுதான் தெரியுமே, திருந்துவது என்றால் எப்போதோ திருந்தி இருக்க மாட்டேனா?

20 comments:

 1. your post is very nice. it is real fact

  ReplyDelete
 2. Thank you for your comments.. visit again

  ReplyDelete
 3. Neengalum yen gosti thana... yen feelng mathiriye irukunga..

  ReplyDelete
 4. Hi friend,
  This seems like my story too.
  naanum ippadiyethan.

  ReplyDelete
 5. clearly u was told the fact here

  ReplyDelete
 6. Hai Kaththukkutti,
  Nanum unnai polathan. I Love Ramanichandran Novels

  ReplyDelete
 7. this is really true.best time pass without stress.even i like ramanichandiran novels.

  ReplyDelete
 8. i also same like u i love to read

  ReplyDelete
 9. neenga sonthellam ennai solvathu pola irukku


  ReplyDelete
 10. DO YOU HAVE LATEST UPDATES OF RAMANI CHANDRAN

  ReplyDelete
 11. Iyo nanum apdithan my husband orey thittu than

  ReplyDelete
 12. sariya solli irukkeenga.good

  ReplyDelete
 13. Hey Suji, Ungalai ninaikkayil ennai polave ullathu. I like you very much. Naan muthalil vaasiththa naaval "Irul Maraiththa Nizhal". Athu RC ezhuthiyathu alla. Naan vaasiththa naavalkalile athaiye siranthathaaga karuthukiren. Neengalum athai vaasikka vendukiren.

  ReplyDelete
 14. Veena
  சுஜி அப்படியே நானும் உங்களை மாதிரிதான்......இப்பவும் அப்படித்தான்....வீட்டுல திட்டு வாங்கினாலும் படிக்கற பழக்கத்த நிறுத்தவே முடியல.

  ReplyDelete
 15. I like your comments. because I am also too..................................

  ReplyDelete
 16. hai this is very good job by selva

  ReplyDelete
 17. hai,

  this is selva! i am mad of RC novels. any body can tell me the name of the story, heroine is working in hero's office as a assistant and she loves him. but the hero under stand wronly.
  the heroine family members send her to him for money. then the heroine attemt suscide. then the hero reaslise his mistake joined to the heroine. this is the stroy i read first in my life but i forgot the name of story. please anybody tell the name of the story.

  ReplyDelete
 18. me too i started to read when was in 11th...got caught also...but my mom is also a grt novel freak esp ramani books..i find ramanibooks very spl..though it s all about boy,girl romance still u can learn a lot from that..heroine s character s always portrayed well..especially paal nila..i have learnt so many things from the book..........

  ReplyDelete
 19. ramani always talks about morality,girls moral values ...and heroines are more lyk following moral values and that makes playboy hero fall for her.....i like that part in her books.......vidiyalai thedum poobalam,paal nila,mayangukiral maathu,vaira malar,avanum avalum,en kannil paavaiandro,oru malar,venmayil ethanai nirangal,chandini,lavanya,madhumathi,and still many many are extraordinary ..............

  ReplyDelete